வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிவர்' புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை மாலை கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை, கடலூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
'நிவர்' புயல் தொடர்பாக மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய இரு மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.