Skip to main content

மோடிக்காகத்தான் புறநானூறு விளக்கம்! -நிர்மலா சீதாராமனைப் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி.!

Published on 07/07/2019 | Edited on 08/07/2019

 

விருதுநகர், திருநகரைத் தொடர்ந்து, சிவகாசியிலும் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்திருக்கிறார் மாணிக்கம் தாகூர் எம்.பி. இந்நிகழ்ச்சியில் திமுக மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, மதிமுக மா.செ. ஆர்.எம்.சண்முகசுந்தரம், மற்றும்  சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்துகொண்டனர். 

 

m

 

ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி எம்.பி. அலுவலகத்தின் திறப்பு விழா நடந்ததும்  செய்தியாளர்களைச் சந்தித்தார் மாணிக்கம் தாகூர்.

அப்போது அவர்,  ராகுல் காந்தியின் முடிவு வருந்தத்தக்கது. ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்கப்போவதில்லை. அவரே தலைவராகத் தொடர வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு. 7 பேர் விடுதலை குறித்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. சட்டபூர்வமாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார் சோனியா காந்தி. 

 

k

 

பட்டாசுத் தொழிலை முழுமையாக பாதுகாத்திட, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதுகுறித்து மத்திய அமைச்சர்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாத்திட, எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். 

 

நிர்மலா சீத்தாராமன் அம்மையார் தமிழில் யானைக் கதையெல்லாம் சொல்லியிருக்கிறார். அந்தப் புறநானூற்றுக் கதை மோடிக்குச் சொன்னாரா? அல்லது எங்களுக்குச் சொன்னாரா என்று தெரியவில்லை. 9-வது வகுப்பு தமிழில் வருகிறது. முழுவதுமாகப் படித்துப் பார்த்தால்..  யானை புகுந்த வீடு,  இல்லை.. காடு எப்படி இருக்குமோ அப்படி இருக்கக்கூடாது.  மோடி அவர்கள் கொண்டுவந்த ஜி.எஸ்.டி.யினாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினாலும், இந்த நாட்டை எப்படி சின்னாபின்னப்படுத்தினார் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருப்பது. அதுவும் மோடியை வைத்துக்கொண்டு சொன்ன தைரியத்திற்கு அவரைப் பாராட்டுகிறேன்.” என்று பேட்டியளித்தார்.
 

சார்ந்த செய்திகள்