Skip to main content

நெல்லை, தூத்துக்குடி வாக்குப் பதிவு நிலவரம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் தூத்துக்குடியில் 69.41% வாக்குகளும்,  திருநெல்வேலியில் 68.09% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

n

 

வாக்குப் பதிவின் தினத்தன்று காலை 7 மணியளவில் நெல்லை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் கூட்டம் வந்துவிட்ட போதிலும் அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. குறிப்பாக நெல்லை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவிற்கு முன்பாக சோதனையாக ஒவ்வொரு வாக்கு மெஷின்களிலும் 50 டம்மி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அவைகள் சரிதானா என்று பூத் ஏஜண்ட்களின் முன்னிலையில் காட்டப்பட்டும்.  சுமார் 70 சதவிகித வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் பழுது காரணமாக மக்கர் செய்துள்ளன. பல மெஷின்கள் மெதுவாகவே இயங்கியுள்ளன. ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவைகள் ஆர்டரில் வந்துள்ளன. இதனால் காலை நேர வாக்குப் பதிவு ஒரு மணிநேரத்திற்கு மேலாகவே தாமதமாகியுள்ளன. இது மாவட்டத்தில் மட்டுமல்ல, அண்டைத் தொகுதிகளிலும் இதே நிலைதான்.

 

n

 

இது இப்படி என்றால், தென்காசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் மெதுவாகவே இயங்கியுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் வாக்கு இயந்திரங்களை இயக்குவதற்கு வழி தெரியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். பின்னர் அதற்கான இன்ஜினியர் வந்து சரி செய்த பிறகே அவைகள் இயங்கியுள்ளன. இதன் காரணமாக வாக்குப்பதிவு தடையாகியிருக்கிறது.

 

n

 

தூத்துக்குடி பார்லியின் கதையே வேறு. வாக்கு இயந்திரங்களின் பேட்டரிகளில் சார்ஜ் குறைவு காரணமாக பல வாக்குச் சாவடிகளில் பிரச்சினை. சார்ஜ் இருக்கும் ஒரு சில வாக்குச் சாவடிகளின் இயந்திரங்கள்  மக்கர் செய்துள்ளன. இவைகள் ஏரியா மெக்கானிக்குகளால் சரி செய்யயப்பட்டு பின் இயங்கியுள்ளன. கணிசமான கால அளவு தாமதம் காரணமாக காலை 9 மணி நிலவரப்படி நெல்லையில் 8 சதவிகிதமும். தென்காசியில் 7 சதவிகிதமும், விளாத்திகுளம் 6.50, தூத்துக்குடியில் 8 சதவிகித அளவு வாக்குகளே பதிவாக நேர்ந்தது.  இறுதி நிலவரப்படி தூத்துக்குடியில் 69.41% வாக்குகளும்,  திருநெல்வேலியில் 68.09% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

இது போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை அளித்திருக்கிறது காங்கிரஸ்.

 

சார்ந்த செய்திகள்