Skip to main content

ஏழு பேரை விடுதலை செய்தால்  முஸ்லிம் கைதிகளை விடுவிக்க நேரிடும் என்பதால் ஆளுநர் மறுக்கிறார்- பழ நெடுமாறன் 

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
g

சிறைச்சாலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் இஸ்லாமியர்களை விடுக்க வேண்டும் என்பதால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலையை ஆளுநர் காலம் கடத்தி வருகிறார் என்கிறார் தமிழர் தேசிய முன்னனி  தலைவர் பழ.நெடுமாறன்.

 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தேசிய முன்னனி தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. ஊடகவியலாளர் காசி.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

 

அங்கு பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசிய போது ,   "நம்மாழ்வார் செய்த தொண்டு காரணமாக பெருமளவில் மண்ணை காக்க வேண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உழவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம்
நம்மாழ்வாரின் உழைப்புதான்.

 

பிளாஸ்டிக் பொருட்களால் இன்று உலகமே பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது.  பிளாஸ்டிக் பொருட்களால் மண் மாசுபட்டுள்ளது, உணவு பொருட்கள் மாசடைந்துள்ளது. இந்தப் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகள் உயிர் இழந்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் பேரழிவை நோக்கி செல்கிறோம்.  மனித குலமே அழிந்துவிடும் நிலை உள்ளது. எனவே இதை தடுக்க உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ள வேண்டும் பல நாடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக்கிற்கு தடைவந்துவிட்டது, தமிழகத்தில் நாளை முதல் தான் இந்த தடை வருகிறது. பொதுமக்கள்பாதிப்பை அறிந்து பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் அரசு பிளாஸ்டிக் பொருட்களை பொருட்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கும் தடைவிதிக்க வேண்டும். இதனால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு வேறு பணிகளுக்கான வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

 

 பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது, இதேபோன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அரசியல் சாசனப்படி ஆளுநர் அவர்கள் விடுதலைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டாக வேண்டும். அரசியல் காரணங்களுக்காக ஆளுநர் கையெழுத்திடாமல் உள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மத்திய அரசு இவர்களை விடுதலை செய்தால் இதேபோன்று ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய நேரிடும் என்ற எண்ணத்திலேயே ஆளுநர் இதனை தவிர்த்து வருகிறார் இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது." என்றார்.

 

சார்ந்த செய்திகள்