Skip to main content

முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜன் உடல் தீட்சர் கொண்டு அடக்கம்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
natara


சசிகலா கணவர் நடராஜனின் உடல் தஞ்சை அருகே உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டது.

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கனவருமான மா.நடராஜன் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 20ம் தேதி நாள்ளிரவில் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னையில் வைக்கப்பட்டு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சையில் உள்ள அருளானந்தம் நகருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களுர் சிறையில் இருந்த சசிகலா இறுதி சடங்கு செய்வதற்கு 15 நாள் பரோலில் வந்து கணவருக்கு இறுதி சடங்கு செய்தார்.

நடராஜனின் உடல் 21ம் தேதி மாலை 4.30 மணிக்கு அருளானந்தம் நகரில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக 6.20 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பழநெடுமாறன் உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்கள் முள்ளிவாய்க்கால் முற்ற அறங்கில் வீர வணக்கத்திற்காக காத்திருந்தனர்.
 

nat


பின்னர் நடராஜனின் உடலை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இறக்கி வைத்தனர். பிறகு அங்கிருக்கும் நடராஜனின் உடலை முற்றத்திற்கு எதிரே உள்ள நடராஜனுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தனர்.

ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்த தேவாதி தீட்சதர் தலைமையில் 5 பேர் மந்திரங்கள் முழங்கி இறுதி சடங்கு செய்தனர். நடராஜனின் உடலுக்கு அவரது தம்பி ராமச்சந்திரனின் மகள் ராஜீ காரியங்கள் செய்தார்.

ஏற்கனவே நடராஜனின் விருப்பபடியே திராவிட சுயமறியாதை முறைப்படி அடக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் தீட்சதரை கொண்டு அடக்கம் செய்ததை கண்ட நடராஜனின் ஆதரவாளர்கள் முகம் சுளித்தப்படியே சென்றனர்.
 

natr


நடராஜனுக்கு இறங்கள் தெரிவித்து பிரணாப் முகர்ஜி கடிதம் அனுப்பியிருந்தார். இதனை இறங்கள் நிகழ்ச்சியின் போது வாசித்தனர். 15 நாள் பரோலில் வந்திருக்கும் சசிகலாவிற்கு தஞ்சையை விட்டு போகக் கூடாது, அரசியல் பேசக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனையோடு வந்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்