Skip to main content

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் கணவர் முருகனுடன் நளினி நேரில் சந்திப்பு

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Nalini met her husband Murugan person Trichy Central Jail Special Camp

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் வேலூர் சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

இவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை முடியும் வரை இந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து நால்வருக்கும் திருச்சி சிறப்பு முகாமில் அறை ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான படுக்கை போன்ற எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், திருச்சி சிறப்பு முகாம் வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முருகனின் மனைவி நளினி தற்போது மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு தனது கணவரான முருகனைச் சந்திக்க வந்துள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் 7 பேரும் வந்துள்ளனர். தனது கணவர் முருகன் மற்றும் அவருடன் உள்ள மூன்று பேரையும் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்