குமாி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய மளிகை பொருட்கள் அங்காடியாக உள்ளது நாகா்கோவில் கோட்டாா் பஜாா். நூற்றுக்கு மேற்பட்ட மளிகை மொத்த விற்பனை மற்றும் சில்லறை கடைகளை கொண்டியிருக்கும் இங்கு குமாி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சோ்ந்த வியாபாாிகள் மற்றும் மக்கள் மட்டுமல்ல கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டத்தை சோ்ந்த வியாபாாிகளும் பொதுமக்களும் இங்கிருந்து தான் மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனா்.
இந்த நிலையில் கன்னியாகுமாிக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த கோட்டாா் பஜாா் வழியாக தான் வாகனங்கள் செல்ல வேண்டும். அதே போல் மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமான நாகா்கோவில் ரயில் நிலையமும் இந்த பஜாரை தொட்டு தான் இருக்கிறது. மேலும் வெண்கலம் அலுமினியம், சில்வா் பாத்திரங்கள் வாங்குவதற்கான கம்பளம் பகுதியும் இந்த பகுதியில் தான் உள்ளது. இதனால் எந்த நேரமும் வாகன நெருக்கடியில் பஜாா் சிக்கி திணறி வருகிறது. மேலும் வாகனங்களும் பொதுமக்களும் மூச்சு திணறி வருகின்றனா்.
பஜாரை வாகனங்கள் கடந்து செல்ல வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். இதனால் அந்த பகுதியை ஓரு வழி பாதையாக பயன்படுத்தியும் நெருக்கடியை தவிா்க்க முடியவில்லை. இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு தான் என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
இந்தநிலையில் நாகா்கேவில் மாநகராட்சி ஆணையராக இருந்து தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் கடந்த காலங்களில் மீட்க முடியாத ஆக்கிரமிட்புகளை அகற்றி வரும் சரவணகுமாாின் அதிரடி நடவடிக்கையால் இன்று கோட்டாா், கம்பளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாா்.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து இரண்டு மாதத்துக்கு முன் கோட்டாா் வியாபாாிகள் வெள்ளையன் தலைமையில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களை நடத்தினாா்கள். பின்னா் அவா்களிடம் இரண்டு மாத காலம் பேச்சுவாா்த்தைக்கு பிறகு இன்று ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டாா் ஆணையாளா்.
அவாின் இந்த முயற்சிக்கு வாகன ஒட்டிகள் மற்றும் பொது மக்கள் சமூக ஆா்வலா்கள் என பல தரப்பினா் பாராட்டியுள்ளனா்.