ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய நீலகிரியில் செப்டம்பர் 16 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். சென்னையில் செப்டம்பர் இரண்டாம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்பொழுதுமே செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை என்ற நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர் ஓணம் பண்டிகைக்கு அறிக்கை வாயிலாகத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வீடியோ வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், 'என்ட பிரியப்பட்ட மலையாளிகளுக்கு இருதயம் நிறைஞ்ய ஓணாசிரமம் சகல். திராவிட மொழிக் குடும்பத்தின் உடன்பிறப்புகளான கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள். திராவிட பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டு வைக்காமல் ஒரு தரப்பினர் வாமன ஜெயந்தி என அடையாளத்தை பறிக்க முயல்கின்றனர். கேரள மக்களே இத்தகைய முயற்சிகளை புறக்கணிப்பார்கள். சமத்துவமும் வளர்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் உறுதி ஏற்கும் நாளாக ஓணம் திருநாள் அமையட்டும். மாவலியுடைய நாடுபோலே உரிமையும் சமத்துவமும் மீண்டும் உண்டாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU