Skip to main content

மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்; வாயில் கொசு மருந்து ஊற்றிய கொடூரம் 

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Mother-in-law threw acid on daughter-in-law

 

விருத்தாசலத்தில் மருமகளின் மீது ஆசிட் மற்றும் கொசு விரட்டி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்ற மாமியாரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலியவரதன் என்பவரின் மனைவி ஆண்டாள்(வயது 55). இவர்களது மகன் முகேஷ்ராஜுக்கு தனது அண்ணன் ஆழ்வார் என்பவரின் மகளான கிருத்திகாவை கடந்த  7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார் ஆண்டாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கிருத்திகாவின் கணவரான முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

 

Mother-in-law threw acid on daughter-in-law

 

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு மாமியார் ஆண்டாள், பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட்டை கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் ஊற்றியுள்ளார். மேலும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் கிருத்திகா வலியால் கதறித் துடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு சென்றனர். இச்சம்பவத்தில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்துவிட்டதால்  புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஆண்டாள் மற்றும் அவரது கணவர் கலியவரதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகள் மீது மாமியார் பாத்ரூம் ஆசிட் வீசி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்