சென்னை ஐஐடி பல்கலைக்கழகத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை விமானநிலையத்தில் வரவேற்றனர். அப்போது விமானநிலையத்தில் பேசிய பிரதமர் மோடி, "சென்னை ஐஐடி விழாவுக்காக வந்த என்னை, வரவேற்க திரண்ட மக்களுக்கு மிக்க நன்றி. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக நான் சென்னை வந்துள்ளேன். சென்னை வந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு பேசும்போது தமிழ் மொழிதான் உலகின் பழமையான மொழி என்று பேசினேன். அமெரிக்க ஊடகங்களில் தமிழ் பற்றி அதிகமான செய்திகள் வருகின்றன. " என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "இளைஞர்கள், முதியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வளர்ச்சியை நாம் அடைய முடியும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மேலும் காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம், காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது" என கூறினார்.