திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் வருடாவருடம் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின்போது பௌர்ணமி அன்று பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் விழாவும் நடக்கும். இந்த படிக்காசு பெறப் போகும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் கவலைக்கிடமான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல் இந்த சம்பவத்தில் காயமடைந்த 12 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாகவும் டுவிட்டரில் அறிவித்துள்ள மோடி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
An ex- gratia of Rs 2 lakh each for the next of kin of those who passed away has been approved from the PM’s National Relief Fund. Rs 50,000 each for the injured has also been approved.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 21, 2019