குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் பேச்சிப்பாறை அணையை பலப்படுத்துவதற்காக 30 கோடி ருபாய் உலக வங்கிநிதி உதவியுடன் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அணையின் அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்புறபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த 48 குடும்பங்களுக்கும் வேறொரு இடத்தில் நிலம் ஒதுக்கி அங்கு பசுமை வீடு கட்டுவதற்கான உதவிகளையும் செய்வதற்கான உத்தரவையும் வழங்கியது.

இதையடுத்து அந்த குடியிருப்புகளை அப்புறபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மக்கள் வசதியில்லாத இடத்தில் நிலம் ஒதுக்கியிருப்பதால் அங்கு குடியேற எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் எம்.எல்.ஏக்கள் சுரே~;ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜே~;குமார் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதோடு போக்குவரத்தும் தடைப்பட்டது. இவர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேசியும் போராட்டத்தை அவர்கள் விடவில்லை. காலையில் இருந்து மதியம் வரை நீடித்த போராட்டத்தை கைவிட பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி சம்பவயிடத்துக்கே வராமல் தனது அலுவலகத்தில் இருந்து கொண்டு தாசில்தார் புரேந்திரதாஸ் ழூலம் தற்போது போராட்டத்தை கைவிட்டுட்டு மாலை தன்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுழூக முடிவு எடுப்பதாக கூறி அதை போராட்டகாரர்களிடம் தெரிவிக்கும் படி கூறினார்.
உடனே தாசில்தார் அதை போராட்டகாரர்களிடம் கூறியதையடுத்து அதை நம்பிய எம்.பி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை கைவிட்டு மாலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எம்.பி யும் எம்.எல்.ஏக்களும் தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் வந்து இரண்டு மணி நேரமாகியும் சப்-கலெக்டர் வரவில்லை. இதனால் கடுப்பான மக்கள் பிரதிநிதிகள் சாலை மறியலில் ஈடுபடலாம் என்று நினைத்த நிலையில் எங்கோ உள்ள பிரச்சினைக்கு இங்கு சாலை மறியல் செய்தால் இந்த பகுதி மக்கள் தங்கள் மீது கோபத்தை காட்டுவார்கள் அதுவும் மாலை நேரம் என்பதால் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்திலே உட்கார்ந்தனர்.

இதனையடுத்து திட்டமிட்டபடி இருட்டும் நேரத்தில் அலுவலகம் வந்த சப்-கலெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்திய மக்கள் பிரதிநிதிகளிடம் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்னொரு நாள் நடத்தி அதில் கலெக்டரிடம் ஆலோசித்து விட்டு நல்ல முடிவு எடுக்கலாம் என மக்கள் பிரதிநிதிகளிடம் சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார் சப்-கலெக்டர். இதனால் முடிவு இல்லாமல் முகத்தை தொங்க போட்டு கொண்டு வெளியேறினார்கள் அந்த 5 மக்கள் பிரதிநிதிகளும். இது சீரோபயிண்ட் மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.