வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (13.10.2024 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்த வரை இன்று முதல் விட்டு விட்டு மழை தொடங்கி நாளை (14.10.2024) முதல் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் அதிகரிக்கக்கூடும்.
அதன்படி வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். எனவே சென்னைக்கு 15ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. 16ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 52 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். வங்கக்கடல் பகுதியைப் பொறுத்தவரையில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே போன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று ஆனது 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவது பொறுத்த வரையில், தற்பொழுது இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தென்மேற்கு தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது. அடுத்த வரும் இரு தினங்களில், அதனைத் தொடர்ந்து வருகின்ற இரண்டு தினங்களில் முற்றாக விலகி தென்மேற்கு பருவ மழை விலகி வட கிழக்கு பருவமழை 15, 16 ஆ,ம் தேதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.