Published on 27/05/2019 | Edited on 27/05/2019
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீர் சரிவர கிடைக்கவில்லை. இதற்கிடையில் மழை வந்தால் பார்ப்போம் என ஒரு அமைச்சர் பேசி சர்ச்சையை கிளப்பினார். மேகதாது அணை கட்ட தமிழக அரசு முன்னரே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாளை காவிரி ஆணைய கூட்டம் மசூத் உசேன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என உத்தரவிடக்கோரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறந்துவிடவேண்டிய நீரான 9.19 டிஎம்சியை திறந்துவிடவும் வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் முதன்முறையாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.