உத்திர பிரதேசத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக வாணியம்பாடி நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியில் உத்திர பிரதேசம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் புத்தன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள உயரமான மலை சாலையில் வந்து கொண்டுந்தபோது, பாரதி நகர் அடுத்த பொன்னியம்மன் கோவில் அருகே மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி லாரி சுமார் 800 அடி உயரத்தில் மலை உச்சியில் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கியது.
தகவல் அறிந்து அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்கள் உதவியுடன் 2 ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி லாரியையும் லாரியில் இருந்த 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். லாரியை மீட்ட அந்த நேரம் லாரியில் இருந்த இரண்டு பேரையும் மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியது.