Skip to main content

ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Local holiday in Coimbatore tomorrow on the occasion of Onam festival!

 

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (20/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2021- ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (21/08/2021) கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணி நாட்களாக உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அவ்வலுவலகங்களுக்கு எதிர் வரும் 11/09/2021 அன்று முழு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது". இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே, ஓணம் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (21/08/2021) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்