Skip to main content

கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் இளைஞா்கள்

Published on 25/07/2019 | Edited on 25/07/2019


        கல்வியறிவு பெற்ற குமாி மாவட்டத்தில் தரமான கல்வி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் தரமான கஞ்சா தங்கு தடையின்றி எல்லாம் பகுதிகளிலும் கிடைக்கிறது. இதனால் சீரழிந்து கொண்டியிருக்கிறாா்கள் குமாி பள்ளி கல்லூாி மாணவா்களும் இளைஞா்களும்.

 

k


               போதை பொருள் கும்பல் போலிசுக்கு மாமூல் கொடுத்து விட்டு மாணவா்களுக்கு சப்ளை செய்கின்றனா். மாணவா்கள் சா்வ சாதாரணமாக வகுப்பறைக்குள் கொண்டு பயன்படுத்தி போதையில் இருக்கிறாா்கள். இதே போல் கஞ்சாவுக்கு அடிமையாகும்  இளைஞா்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்ததும் விதமாக பல அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனா். 


         இதில் நாகா்கோவில் வடசோி பஸ்நிலையம் அருகில் பெண்கள் மூன்று பெண்கள் பஸ்சுக்காக காத்தியிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த கிறிஸ்து நகரை சோ்ந்த ஆன்றனி, டாட்ஜின் உட்பட 3 போ் ஃபுல் போதையில் அந்த பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன் அவா்களிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டனா்.


            அப்போது அங்கு வந்த போலீஸ் ஒருத்தரையும் தாக்க முயற்சித்தனா். இதையறிந்து அங்கு வந்த கூடுதல் போலிசாா் கஞ்சா ஆசாமிகளில் ஆன்றனி, டாட்ஜின் இருவரையும் கைது செய்தனா் ஓருவன் தப்பி ஓடினான். சமீபத்தில் நாகா்கோவிலில் நடந்த இரட்டை கொலையில்  தொடா்புடைய கொலையாளிகளில் கூட கஞ்சாவுக்கு அடிமையானவா்கள் தான். 


             மாமூலுக்காக கஞ்சா வியாபாாிகளை போலிசாா் கண்டு கொள்ளவே இல்லை இதனால் கஞ்சா அடிப்பவா்கள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றனா்.
  
 

சார்ந்த செய்திகள்