Skip to main content

ஜெயலலிதா:கொடநாடு கொலைகள்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
ko

 

ஜெயலலிதா இறந்த பிறகும், அதற்கு முன்பும் கொடநாடு எஸ்டேட்டில் பல கொள்ளை - கொலை முயற்சிகள் நடந்தன. பல மரணங்கள்  நிகழ்ந்து மூடி மறைக்கப்பட்டன. ஒவ்வொரு மரணத்துக்கும் ஒரு காரணம் சொல்லப் பட்டது.

 

   ஜெயலலிதா இறந்த பிறகு கொடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து, கார் விபத்து – கத்தி குத்து – லாரி விபத்து உள்பட பல்வேறு கொலைகள் அரங்கேறின. இதுகுறித்து, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அதிச்சியான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

 

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பணம், தங்கக்கட்டிகள், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

 

ko

   

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலர் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.


சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் டிரைவர் கனகராஜ் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயன், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே வழக்கு விசாரணைக்கு திபு ஆஜராகவில்லை. அவர் வேறொரு வழக்கில் கண்ணனூர் சிறையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். கேரள போலீசார் திபுவை மாவட்ட நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தினர்.

   இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளின் மர்ம மரணங்கள் இந்தியாவின் கொடூரமான கொலைகள் நடந்த வியாபம் ஊழல் மர்ம மரணங்களை நினைவூட்டுவதாக மாறின.

 

கோடநாடு கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ்தான். அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் அவரது நண்பர் சஜீவன் ஏற்பாட்டின் பேரில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.


கொடநாடு கொள்ளையின் மூளையாக செயல்பட்ட டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் மோதி விபத்தில் பலியானார். இது விபத்தா? கொலையா என்று தெரியாமலேயே வழக்கு முடிக்கப்பட்டது.

 

    கனகராஜின் நண்பரான சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

   
அந்த சயனை கொல்ல பல முயற்சிகள் நடந்த நிலையில், அவர் கேரளா தப்பிச் சென்றார். தொடர்ந்து, டெல்லியில் தலைமறைவான சயன் தற்போது கொடநாடு கொள்ளை மற்றும் கொலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், 5 கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை அமைத்து இந்த செயல்களை அவர் செய்ததாக, தெகல்கா முன்னாள் ஆசிரியர் துணையுடன் டெல்லி பத்திரிகையாளர்கள் முன்பாக வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்