Skip to main content

கொடைக்கானலில் போலி மது பாட்டில்களை சாலையில் கொட்டி மக்கள் போராட்டம்!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
க்


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது.  இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியின் இயற்கையை பார்த்து ரசித்துவிட்டு போய் வருகிறார்கள். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் பலர் கோடையில் விற்கக்கூடிய மதுபாட்டில்களை வாங்கி போதையில் மிதந்து விட்டும் செல்கிறார்கள். இதனால் கொடைக்கானல் நகர் மற்றும் பெருமாள் மலை பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இருந்தம் கூட மது பாட்டில்களை கள்ள சந்தையில் வாங்கி வந்து  பலர்  அங்கங்கே  சில்லிங் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.  அதன் அடிப்படையில் தான் கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள  பெருமாள் மலையில் கள்ளசந்தையில் வாங்கிய மதுபாட்டில்களை சில்லிங் மூலம்  விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 250க்கு மேற்பட்ட போலி மது பாட்டில்களை சமூக ஆர்வலரான பேத்துப்பாறை சேர்ந்த மகேந்திரன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த மது பாட்டில்களை கைபற்றி அதை கொடைக்கானல் செல்லும் சாலையில் கொட்டி சாலையில் போராட்டத்தில் குதித்தனர்.

 

க்


 இதனால் திண்டுக்கல், பழனி போக்குவரத்து ஒருமணி நேரம்  பாதிக்கப்பட்டது.  இந்த தகவல் போலீசாருக்கு தெரியவே உடனே ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

 

இதுபற்றி சமூக ஆர்வலரான பேத்துப்பாரை மகேந்திரனிடம் கேட்டபோது...ஏற்கனவே பெருமாள் மலையில் டாஸ்மாக் கடை இருந்தது.  அதை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் எடுத்தனர்.  அப்படி இருக்கும் போது கொடைக்கானல் உள்பட சில இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கள்ளசந்தையில் வாங்கி வந்து ஒரு குவாட்டர் பாட்டில் 200 ரூபாய்வரை  சில்லிங் போட்டு கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வந்தனர். இதனால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள்  வரை  போதை பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர்.

 

க்

 இந்த விஷயம் தெரிந்து நாங்களும் பல முறை போய் திருட்டு தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருபவரிடம் இங்கு எல்லாம் சில்லிங் விற்க கூடாது என்று சொல்லியும் கூட தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர் இது பற்றி அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்தனர்.  அதனால்தான் இன்று அப்பகுதி மக்களை திரட்டி கள்ளச் சந்தையில் வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மட்டுமல்லாமல் அந்த கடையையும் அடித்து நொறுக்கி விட்டனர்.  அதுபோல் இனிமேல் இப்பகுதியில் சில்லிங்  மது பாட்டிகள் விற்ககூடாது. மீறி யாரும் விற்பனை செய்தால் அப்பகுதி மக்களை திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும்  குதிப்போம்  என்று கூறினார். இச் சம்பவம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்