தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 23ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலின் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமே நடைபெறும் என்கிற நிலை இருப்பதால் மக்களவைத் தேர்தலுக்கு இணையாக இதற்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டார்கள்.
இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திமுக - 14 தொகுதிகள்
அதிமுக - 3 தொகுதிகள்
இழுபறி - 5 தொகுதிகள் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர்,“தமிழகத்தின் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் கருத்து கூற விரும்பவில்லை.‘கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை’ என்ற கலைஞர் கருத்தையே நானும் சொல்கிறேன்” என கனிமொழி கூறியுள்ளார்.