Skip to main content

கந்த சஷ்டி விழா துவங்கியது....

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
tiruchendur

 

தூத்துக்குடியிலுள்ள திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய பெண் திடீர் மரணம்! 

Published on 09/10/2023 | Edited on 10/10/2023

 

The woman who kidnapped the child in Tiruchendur passes away suddenly!

 

கன்னியாகுமரி மாவட்டம், மனவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் அந்த பகுதியில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ரதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதில் மூன்றாவது குழந்தையாக கைக்குழந்தை ஸ்ரீஹரிஸ் (1 1/2 ) உள்ளார். 

 

இந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி தனது குழந்தையுடன் கணவன் மற்றும் மனைவி இருவரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, அந்த கோவிலில் தங்கி இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இவர்களுடன் நட்பாக பேசி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பெண் இவர்களுடன் அந்த கோவிலில் தங்கி வந்துள்ளார்.

 

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரதி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணிகளை சலவை செய்வதற்காக திருச்செந்தூர் புறப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணும் தானும் உடன் வருவதாக கூறி அவர்களுடன் வந்துள்ளார். திருச்செந்தூர் வந்ததும், கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள குளியலறைக்கு துணிகளை சலவை செய்ய ரதி சென்றுவிட்டார். அந்த பெண், குழந்தையை தான் பார்த்து கொள்வதாக கூறியதால் ரதியின் கணவர் முத்துராஜ் சோப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு, குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு வருவதாக கூறி அந்த பெண் குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

 

The woman who kidnapped the child in Tiruchendur passes away suddenly!

 

நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் முத்துராஜூம், ரதியும் கோவில் வளாகத்தில் தங்களது குழந்தையை தேடி வந்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு, காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில், இந்த விவகாரத்தில் திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியனையும் போலீஸார் கைது செய்தனர். 

 

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகிய இருவரையும் கோவை ஆலந்துறை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது திலகவதி சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். பிறகு அவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் திலகவதி திரும்ப வராததால் போலீஸார் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கீழ் விழுந்திருந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட போலீஸார், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாக போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 

 

 

Next Story

‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஊராட்சித் தலைவர் பதவியா?’ - கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்த வார்டு உறுப்பினர்களால் பரபரப்பு! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Is the post of panchayat leader for a woman

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுழற்சி முறையில் பட்டியலினப் பெண்களுக்கு இந்த ஊராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அந்தக் கிராமத்தினர் கருப்புக்கொடி காட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மையான ஓட்டுகள் பொதுப்பிரிவினருக்கு உள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அந்தக் கிராம மக்கள், தேர்தலைப் புறக்கணித்தனர். 

 

பஞ்சாயத்து தலைவர் தேர்தல் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல்களில் கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவோ போட்டியிடவோ முன்வரவில்லை. இதனால், பட்டியல் இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி ஆகிய இருவர் மட்டும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் 13 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில், 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், வார்டு உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாகவே இருந்துவந்தன. இதனால் கிராம வளர்ச்சிப் பணிகள் சுணங்கிக் கிடந்தன. இந்நிலையில், காலியாக இருந்த 6  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

 

Is the post of panchayat leader for a woman

 

இதில், 1வது வார்டுக்கு வைகுண்டசெல்வி, 2வது வார்டுக்கு கேசவன், 3வது வார்டுக்கு நடராஜன், 4வது வார்டுக்கு சுஜாதா, 5வது வார்டுக்கு யாக்கோபு, 6வது வார்டுக்கு பரிமளச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றனர். இதில், பரிமளச்செல்வியின் மகன் இறந்துபோனதால், பரிமளச்செல்வி மட்டும் பதவியேற்கவில்லை. இதற்கிடையே, பிச்சிவிளை ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (22.10.2021) நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, திருச்செந்தூர் ஒன்றிய ஆணையாளர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

 

இதையொட்டி, காலை 10 மணியளவில் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த வார்டு உறுப்பினர்கள் வைகுண்டசெல்வி, கேசவன், நடராஜன், சுஜாதா, யாக்கோபு ஆகிய 5 பேரும், திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சித் தலைவரிடம் வழங்கினர். பின்னர், அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “எங்களுக்கு பதவியில் தொடர்வதற்கு விருப்பம் இல்லை. எங்களது ஊராட்சியில் மொத்தம் உள்ள 827 வாக்குகளில், 6 வாக்குகளே பட்டியல் இனத்தவருக்கு உள்ளது. குறைந்தது 50 வாக்குகளுக்கு மேல் இருந்திருந்தால், தலைவர் பதவியைப் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். எனவே, ஊர்மக்கள் முடிவுபடி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம்” என்றனர்.

 

இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, “துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புத்தகத்தில் தீர்மானமாக கொண்டுவந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும்” எனத் தெரிவித்தனர். பட்டியலினப் பெண் ஊராட்சி தலைவரை எதிர்த்து வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.