Skip to main content

கஜா புயல் ! நாகை MLA அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி முகாம்! அவசர தொடர்புக்கு செல்போன் எண்கள்...

Published on 15/11/2018 | Edited on 16/11/2018
thamimun ansari




கஜா புயல் அதிவேகமாக நாகப்பட்டினத்தை நெருங்கிய நிலையில், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

 

thamimun ansari



மேலும், எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர்கள் ஆங்காங்கே சென்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

 

thamimun ansari

 

புயல் நள்ளிரவு முதல் வீசும் என தகவல் வந்ததால், இரவு 11 மணி முதல் நாகை எம்.எல்.ஏ. அலுவலகத்திலேயே அலுவலக ஊழியர்களுடன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. முகாமிட்டுள்ளார்.

 

கஜா புயலை முன்னிட்டு மஜக பேரிடர் மீட்பு குழு தொண்டர்களுடன் நாகையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தார். அதிகாரிளும் அவருடன் சுற்றி வருகின்றனர்.

 மேலும் நம்மிடம், பேரிடர் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும்  நிவாரண  பணிகள் குறித்து பேசி வருதாக தெரிவித்தார்.

 
 

thamimun ansari


அவசர உதவிக்காக, இரவு முழுக்க தன்னை அணுகு மாறும் தொகுதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அவசர தொடர்புக்கு கீழ்கண்ட எண்களையும் தந்துள்ளார்.

 

சம்பத் 9361 77 1714


தம்ஜுதீன் 79046 870 01


முபாரக் 8610 984079


முரளி 73396 00828


ரிபாயி 8526 55 65 29
 

 

 


 

சார்ந்த செய்திகள்