Skip to main content

இந்தியன் 2 விபத்து- இயக்குனர் சங்கரிடம் விசாரணை

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் திரைப்பட இயக்குனர் சங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

 

Indian 2 accident - Investigation to Director Sankar

 

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தின் இயக்குனர் சங்கர்  சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

 

 

சார்ந்த செய்திகள்