Skip to main content

தமிழ்நாட்டில் நீட்டின் தாக்கம்... இன்று கூடுகிறது ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

The impact of Neet in Tamil Nadu ... The group led by AK Rajan is meeting today!

 

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இக்குழுவில், கடந்த 10ஆம் தேதி மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர்  உறுப்பினர்களாக  நியமனம் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.

 

இன்று (21.06.2021) தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர், ''தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் பற்றி இன்று மாலை இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்த இருக்கிறது ஏ.கே. ராஜன் தலைமையிளான குழு.

 

 

சார்ந்த செய்திகள்