Published on 12/07/2021 | Edited on 12/07/2021

சென்னையில் இன்று (12.07.2021) மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கால சூழலால் அரசியலில் நாம் ஈடுபட முடியாமல் போனது. வருங்காலத்திலும் நாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு எவ்வித சார்புமின்றி அதன் நிர்வாகிகள், ரஜினிகாந்த் நற்பணி மன்றமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.