Published on 24/08/2020 | Edited on 24/08/2020

மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்க போகிறீர்கள் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் ஆகியவை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? தனியார் பள்ளிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வகுப்பு நடத்த முடியுமா? மலைப் பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்க போகிறீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை ஆன்லைன் வகுப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.