தனது காருக்கு தானே தீவைத்துவிட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை திருவள்ளூரை அடுத்த சோழவரத்தில் மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருரின் கார் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து மக்கள் கட்சியின் அனுமந் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார் மற்றும் கட்சி நிர்வாகி ஞானசேகரன் ஆகியோர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில் தாங்கள் சென்றுகொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர் அதனால் கார் முழுவதும் எரிந்தது கூறியுள்ளனர். இதை அடுத்து அங்கு வந்த போலீசார் எரித்துக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெட்ரோல் குண்டு வீசியதால் நடந்ததா என்ற நோக்கில் போலீசார் ஆய்வு செய்தபொழுது அங்கு பெட்ரோல் குண்டு வீசியதற்கான எந்த தடயமும் இல்லை.
இதை அடுத்து நடத்திய விசாரணையில் ஞானசேகரன் தங்களேதான் காரை தீவைத்தோம் என ஒப்புக்கொண்டார். தாங்களே தங்கள் காரை கொளுத்திவிட்டு நாடகமாடிய இந்துமக்கள் கட்சியின் அனுமந் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.