Skip to main content

தண்டோரா போட்டு மாணவர்களை கல்வி தொலைக்காட்சியை பார்க்க சொன்ன தலைமையாசிரியர்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
the headmaster who publicity through drum to attend class on tv

 

திருச்சி, முசிறி கல்வி மாவட்ட உப்பிலியாபுரம் அருகே  வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு உதவி மான்ய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வா.ரவிச்சந்திரன். கடந்த 2015 -16ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து  தொற்று  கடுமையாக இருந்த மே மாதத்தில் கரோனா தடுப்பு பணிகளில் தலைமையாசிரியர் ரவி தன்னார்வலராக பணியாற்றினார். கிராமப் பகுதிகளில் கரோனா, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

 

சாலையோரவாசிகள், ஆதரவற்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தான் பணிபுரியும் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில், தலைமையாசிரியர் ரவி தண்டோரா போட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவிப்பு செய்து வருகிறார். இதில், மாணவர்களுக்காக கல்வித் தொலைக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

 

இதில், வகுப்புகள் நடைபெறும் அட்டவணையும் உள்ளது. எனவே, வீட்டில் இருக்கும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் தொடர்ந்து பார்க்கவும். பெற்றோர்களும் மாணவர்களை கல்வித் தொலைக் காட்சியைப் பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அறிவித்தபடி செல்கிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்