உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஊ.செல்லூர் கிராமத்தில் போன ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காரணம் அந்த ஊரில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அவர்கள் மேல்நிலை படிப்பு தொடர உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் சென்று மட்டுமே படிக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அந்த ஊரில் ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் காலை 7 மணி போல் அந்த ஊர் வழியே வந்து சென்றுகொண்டிருந்தது. இப்போழுது இரண்டு ஆண்டுகளாக அந்த பேருந்தும் வருவதில்லை. இதை பற்றி அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவிக்கையில்,
எங்களால் தினசரி ஆட்டோக்கலில் சென்றுபடிக்க பணம் இல்லை என்று பெண் பிள்ளைகள் கண்ணீர் மல்க கூறினார்கள். சில பெற்றோர்களிடம் கேட்ட போது எங்கள் ஊரில் அனைத்து கட்சிகளிலும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நபர்கள் உள்ளனர் ஆனால் இந்த பிள்ளைகளின் படிப்புகளை வீணாக்கிய பேருந்தை மறுபடியும் ஊர் வழியாக கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை. எல்லா எங்கள் தலை விதி. இந்த உளுந்தூர்பேட்டை தொகுதியிலே பேருந்தே வராத ஒரு கிராம இருக்கிறதென்றால் அது இந்த ஊ.செல்லூர் மட்டுதான். நாட்டில் பெண்களுக்கு படிப்பு முக்கியமான ஒன்றென்று சொன்ன இந்த அரசுக்கு 6 கிலோமீட்டர் தூரம் நடக்கமாட்டாங்க பேருந்து வசதி செய்து கொடுக்கணும் என்ற அறிவு இல்லாமல் போய்விட்டது.
இந்த கிராமத்தில் உள்ளவர்களின் படிப்பை வீணாக்கியது இந்த அரசா? அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து டிப்போ அதிகாரிகளின் அலட்சியமா? என்று மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் மினி டெம்போக்கள், டாடா மினி டெம்போக்களில் பல பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆபத்தான பயணத்தில் தினமும் பள்ளிக்கு செல்கின்றார் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்