திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மொத்தம் சுத்திகரிப்பு செய்யும் சிகிச்சையை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை செய்து வந்தும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வாலிபரின் தாயே தானாக முன்வந்து தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி திருச்சி தலைமை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் நேரில் ஆலோசனை பெற்றுள்ளனர்.
அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு தாய் மற்றும் மகனுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் சிறுநீரகம் பொருத்துவதற்கான அனைத்து சோதனை முடிவுகளும் சாதகமாக இருந்துள்ளது. இதையடுத்து வாலிபரின் தாயின் ஒரு சிறுநீரகத்தை 19 வயது வாலிபருக்கு பொருத்தி திருச்சி தலைமை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.