Skip to main content

மெடிக்கல் ஷாப்களில் வலி நிவாரணிகளை திருடி போதை; சிறுவன் உட்பட  மூன்று பேர் கைது

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Gang used painkillers as stolen drugs; three arrested, including a boy

 

இரவு நேரங்களில் மருந்து கடைகளின் பூட்டை உடைத்து வலி நிவாரணி மாத்திரைகளை திருடிச் சென்று போதை மாத்திரையாக பயன்படுத்தி வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 'கோர் மருந்தகம்' என்ற மருந்து கடையின் பூட்டை உடைத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் திருவான்மியூரில் மொபைல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தச் சிறுவன், செம்மஞ்சேரியை சேர்ந்த மணி மற்றும் கண்ணகி நகரைச் சேர்ந்த அப்பு என்ற இருவருடன் பழகி வந்ததாகவும், இவர்கள் இருவரும் மெரினாவில் பகல் நேரங்களில் குதிரை ஓட்டிவிட்டு இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் சென்று மருந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் மருந்து கடைகளிலிருந்த வலி நிவாரண மாத்திரைகளைத் திருடி அவற்றை போதை மருந்தாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.