பழனியில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார், பிஞ்சு ஆகியவை பாஜகவினருக்கு இயக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அறநிலைத்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தோன்றுகிறது என முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி நிருபர்களிடம் பேசும்போது, “யாத்திரை என்பது பா.ஜ.க.வின் மதவெறி யாத்திரையாக உள்ளது. தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக வேலையாக யாத்திரை உள்ளது. நீதிமன்றம் தடை செய்த யாத்திரையை மாநில அரசு கண்டுகொள்ளாமல் நடைபெற்றுவருகிறது.
காலையில் யாத்திரை, மாலையில் கைது என்று போலி நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார் ஆகியவை பாஜகவினருக்கு இயக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அறநிலைத்துறை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தோன்றுகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது கைது செய்யப்படுவது ஜனநாயக விரோத நடவடிக்கை. பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்படுகிறார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட பின்னர் 12 மணிக்கு மேல் விடுவிக்கப்படுகிறார். இது எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கூடிய விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்” என்று கூறினார்.