Published on 27/04/2018 | Edited on 27/04/2018
தேனிமாவட்டம் கம்பம் மேகமலை வன உயிரின சரணாலையத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயினால் அப்பகுதியிலுள்ள மூலிகைகள் எரிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனிமாவட்டம் கம்பம் வண்ணத்துப்பூச்சி பாறை, வெண்ணியாறு கேட் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயின் வெப்ப தாக்கத்தால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும் விளைநிலங்களுக்குள்ளும் புகும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயில் அரியவகை மூலிகைகள் எரிந்து அழிந்துபோகும் வாய்ப்புள்ளதால் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடிவருகின்றனர்.