Published on 13/02/2021 | Edited on 13/02/2021

கோப்புப்படம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (12.02.2021) ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் உயிரிழப்பு என்பது 19 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமில்லாது தேசிய அளவிலான தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும், பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சிவகாசி காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட விபத்து சோகத்தில் இருந்து மீளாத நிலையில், இன்றும் பட்டாசு ஆலையில் விபத்து நேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.