Skip to main content

விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.22.20 கோடி அபராதம் வசூல்... தமிழக காவல்துறை தகவல்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

fine collected during lockdown in tamilnadu

 

 

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.22.20 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சூழலில், பொருளாதாரம், பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஊரடங்கை அரசு தளர்த்தி வருகிறது.

 

இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களில் ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.22.20 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 10,04,550 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,99,826 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 9,06,939 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்