சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மீது வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை, வட்டி என ரூ.525 கோடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுப்பது தொடர்பாக ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனை கைது செய்தனர்.
தொடர்ந்து நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி உள்ள பாஜக பிரமுகர் தேவநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில் அவருடைய அலுவலகத்தில் இருந்து மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.