Skip to main content

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததைக் கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Farmers struggle lack of sugarcane in Pongal gift package!

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் ஆற்றுத்திருவிழாக்களை முன்னிட்டு கரும்புகள் அறுவடை செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்பை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்வர்.

 

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு கொடுக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. கடந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கியது. பன்னீர் கரும்பை அரசு கொள்முதல் செய்து வந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு மொத்தமாக பணம் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். இதை நம்பி பன்னீர் கரும்பு விவசாயிகள் தங்களின் சாகுபடி பரப்பளவை இந்தாண்டில் விரிவுபடுத்தியிருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த நிலையில், அரசிடமிருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு வராததால், பன்னீர் கரும்பு விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கிருஷ்ணன்பாளையம், புலியூர், காட்டுசாகை, அம்பலவாணன்பேட்டை, கிருஷ்ணகுப்பம், கட்டியங்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி நான்கு முனைச் சந்திப்பு அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் ஒரு கையில் பன்னீர் கரும்பு, மறு கையில் பூச்சி மருந்தை ஏந்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்தும்; சாலையில் இலை இல்லாமல் பரிமாறப்பட்ட உணவையும் அதனருகில் பூச்சி மருந்து பாட்டிலை வைத்தும்; கரும்புக் கட்டை படுக்கவைத்து ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு சாலைமறியலில் ஈடுபட்ட பன்னீர் கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.  கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கோட்டாட்சியர் கூறியதையடுத்து, பன்னீர் கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கரும்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.