Skip to main content

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய  ஆட்சியர் உத்தரவு

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
er

 

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டு, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


 ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ந் தேதி  முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் பினாஸ்டிக் ஒழிப்பு  நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் தி சி.கதிரவன் ஈடுபட்டு வருகிறார்.

 
இன்று  சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை முருகன் கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். மேலும் மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு துணிப்பை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் சோதனைச் சாவடி அலுவலர்கள் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பூக்கடைகளிலும், அப்பாய் செட்டி வீதி பகுதியில் இருந்த இறைச்சி கடைகள், காங்கேயம் ரோடு மேற்கு பகுதியில் இருந்த சுமார் 50 கடைகளில் இருந்து 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தார் மேலும் அரசு அதிகாரிகள்  தினந்தோறும்  வனிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவர் கடை உரிமையாளார்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸப்டிக் பொருள்கள் வைத்திருந்தால்  அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனையாளரை கண்டறிந்து பேரூராட்சிப் பகுதிக்குள் நுழையாத வண்ணம் கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதே போல், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கொங்கலம்மன் கோயில் வீதி மற்றும் ஈரோடு இரயில் நிலையங்களில் செயல்படும் சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகளில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு  திடீர் சோதனை மேற்கொண்டதில், சுமார் 15 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.  இனி வருங்காலங்களில் இதேபோன்று தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் பிளாஸ்டிக் மெருகூட்டப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட கேக் பக்கம், தெர்மகோல்  உபயோகப்படுத்தக்கூடாது என்று வணிகர்களிடம் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் உணவு வணிகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சத்தியமங்கலம் அருகே இளம் பெண் தீ குளித்து தற்கொலை!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Young woman lost their near Sathyamangalam

ஈரோடு மாவட்டம், சிக்கரசம்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் தவமணி (19). இவருக்கு கடந்த பிப்ரவரியில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(26) என்பவருடன் திருமணமானது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக தவமணி சுரேஷை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். தவமணிக்கு வலிப்பு நோய் இருப்பதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக தவமணிக்கு மன உளைச்சலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பெரியூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற தவமணி சம்பவத்தன்று இரவு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தவமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து, சத்திமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தொடர் மழை; ஒரே நாட்களில் 2 அடி உயர்ந்த பவானிசாகர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
continuous rain;  Bhavanisagar rose 2 feet in a single day


ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை  5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று (28/06/2024) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,894 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 62.44 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.