வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் நேற்று (03.01.2025) காலை 7.00 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கிய நிலையில், தற்போது 24 மணி நேரத்தைக் கடந்து 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது.
இதில் 18 -க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஏற்கனவே நேற்று(3.12.2024) இரவு கல்லூரி லாக்கரில் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கல்லூரியின் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமானகதிர்ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவுற்ற நிலையில், கதிர் ஆனந்திற்குக்கு சொந்தமான கல்லூரில் இன்றும் சோதனை நீடிதது வருவது குறிப்பிடத்தக்கது.