ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுந்தபாடி ஊராட்சியை நிர்வாக வசதிக்காக பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கவுந்தப்பாடி ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பேரூராட்சியாக மாற்றக் கூடாது வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது தற்போதைய ஊராட்சியில் உள்ள கிராமங்களில் போதுமான குடிநீர் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் ,ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை சார்ந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் பேரூராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கும் என்பதால் பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
கிராம மக்கள் அதிகமாக குவிந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.