Published on 27/12/2020 | Edited on 27/12/2020

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மூன்று இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு என்பது இல்லை. 2021 தேர்தலில் பாஜகவின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாக்கும் சட்டம். விவசாயிகளுக்கு எதிரான கட்சிதான் திமுக எனவும் விமர்சித்துள்ளார்.