Skip to main content

விசைத்தறிக்கு தனியாக அமைச்சகம் வேண்டும் - தி.மு.க தேர்தல் அறிக்கை குழுவிடம் கோரிக்கை!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

dmk in erode

 

விசைத்தறிக்கு என்று தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும் எனத் தி.மு.க தேர்தல் அறிக்கை குழுவிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

வருகிற சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் 4 ஆம் தேதி ஈரோடு வந்திருந்தனர். தனியார் மண்டபத்தில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். இதில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரில் வந்து மனு கொடுத்தனர், பிறகு அவர்கள் கூறும்போது,

"விசைத்தறி கூடங்களில் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேணடும், விசைத்தறிக்கு எனத் தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின் திட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும், விசைத்தறியாளர்கள் பெற்றுள்ள ரூ.65 கோடி வங்கி மூலதன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விசைத்தறிக்கான தனிரக ஒதுக்கிடு செய்ய வேண்டும், ஆண்டு முழுவதும் இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், விசைத்தறியளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும், இலவச வேட்டி சேலைக்குக் கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை மனுவாக தி.மு.க தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்கியுள்ளோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்