
திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று கூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.
திமுகவும், தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றே கூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில், நேற்று தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தது தொடர்பாக இன்று திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விவரித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்ததில்,
வரும் மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதியான, திட்டவாட்டமான முடிவு. எஞ்சிய 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திடவேண்டும் எனக்கூறியுள்ளார்.
அதேபோல் வரும் மார்ச் 11 ஆம் தேதி திமுக எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.