Skip to main content

செயற்கை வைர வியாபாரி கரோனாவால் உயிரிழப்பு!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

 corona

 

திருச்சியில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றாத காரணத்தினால் நோய்தொற்று கட்டுக்கடங்காமல் பரவுகிறது.

திருச்சி கிருஷ்ணன் கோவில் தெருவில் செயற்கை வைர வியாபாரி குடும்பத்தினர் ராஜஸ்தானில் குடும்ப விழாவிற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர். வெளி மாவட்டத்தில் இருந்து வந்ததாதல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் செயற்கை வைர வியாபாரிக்கு கரோனா வைரஸ் பரிசோதனைக்காக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சின்ன செட்டித் தெரு, பெரிய செட்டித் தெரு தங்கம், வைர வியாபாரிகள் குடும்ப விழாவில் அண்மையில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தான் அவரவர் இல்லம் திரும்பி உள்ளார்கள்.

தற்போது தலைமுறை தலைமுறையாக செயற்கை வைரம் வியாபாரம் செய்து வரும் செல்வந்தர் மறைவு வைர வியாபாரிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்