Skip to main content

"நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

"Deleted subjects must be re-added" - Chief Minister MK Stalin's insistence!

 

திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (26/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் ‘சங்கதி’, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் ‘கைம்மாறு’, ‘என்னுடல்’ ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

 

பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கிவரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்