Skip to main content

கள்ளசாராய வியாபாரிகளை தட்டி தூக்கிய காவல் உதவி ஆய்வாளர்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
cuddalore kurinjipadi police station



கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா. இவர் கள்ளசாராய வியாபாரிகளை எச்சரித்து, அந்த வியாபாரத்தை தடுத்து நிறுத்தினார். 
 

குறிஞ்சிப்பாடி பகுதியல் கள்ளசாராய விற்பனையை செய்யாமல் அவர்களை ஓடவிட்டு வந்த நிலையில், குடும்ப பெண்கள் போர்வையில் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில்  இட்லி கடை நடத்தி வரும் காமாட்சி என்ற பெண்ணும், அவருக்கு துணையாக மதிவதனியும் கூட்டாக சேர்ந்து, புதுச்சேரியில் இருந்து கள்ளதனமாக சாரயம் மற்றும் புதுவை மாநில மதுபானங்களையும் கடத்தி வந்து குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்து வந்தனர்.
 

இந்த தகவல் காவல்நிலையத்திற்கு தெரிய வந்ததும், அதிரடியாக இருவரையும் கையும் களவுமாக கைது செய்தார் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா. குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலர்களும் உடன் இருந்தனர்.

 இவரின் அதிரடியால், திருட்டு, வழிபறி, போன்ற  குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து உள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இவரின் சிறப்பான காவல் பணிக்கு குடியரசு தினத்தில் பாராட்டு மடலும் வழங்கியனார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நோட்டமிட்ட கடப்பாரை திருடர்கள்; தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Thieves of Noted Homes;viral cctv

கடலூரில் நள்ளிரவில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சில நபர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பிடித்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஐந்து பேரையும் உட்கார வைத்திருக்கும் வீடியோ காட்சிகளும், கடப்பாரையுடன் கொள்ளை அடிப்பதற்காக வேவு பார்க்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.81 கோடியில் அருவாமூக்குத் திட்டத்தைத் தொடங்கி வைத்த வேளாண்துறை அமைச்சர்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பரவலாறு வழித்தடத்தில் இருக்கும் 24 கிராம ஊராட்சிகளில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை மற்றும் வெள்ள காலங்களில் அதிக நீர் வரத்தால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.  இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் இதனை நிரந்தரமாக சரி செய்யும் விதமாக அருவாமூக்கு  திட்ட மதிப்பீடு தயார் செய்தது.   ஒவ்வொரு மழைக்காலங்களில் பாதிக்கப்படுவதைக் கருதி தமிழக அரசு பல்வேறு நிதிச் சிக்கலிலும் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதனை ஒட்டி கடலூர் அருகே திருச்சோபுரம் அருகே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமைத் தாங்கினார்‌. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் வடிநிலைக்கோட்டை நீர்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் திட்டத்தை விளக்கி பேசி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.

Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

பின்னர் பேசிய அவர், “குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பரவலாறு மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் அதிக வெள்ள நீர் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பகுதி மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்தில் இந்தப் பணிகள் முடிக்கப்படும். அதேபோல் கரிவெட்டி கற்றாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த பொது மக்களுக்கும் வாழ்வாதார இழப்பீட்டுத் தொகை தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இது பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சிநாதன் சரவணன் உதவி பொறியாளர்கள் ரமேஷ் கௌதமன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.