Skip to main content

மதுரையை சேர்ந்தவருக்கு தமிழகத்திற்குள்ளேயே இருந்து கரோனா பரவியது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தநிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

 

coronavirus case - tamilnadu Minister vijayabaskar press meet

 



இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் " லண்டனிலிருந்து சென்னை திரும்பிய இருவருக்கும், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. கரோனா பாதித்த மூவரில் ஒருவர் புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஆவார். மற்றோருவர் திருப்பூரைச் சேர்ந்தவர் ஆவார்.  புரசைவாக்கத்தைச் சேர்ந்தவருக்கு சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், மதுரையை சேர்ந்த 54 வயதுடைய நபருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும், திருப்பூரை சேர்ந்தவருக்கு ஈஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார். 
 

 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு ஆகும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்படுகிறது. கரோனா தொற்று உறுதியாகியுள்ள மதுரையை சேர்ந்த 54 வயது நபர் தமிழகத்திற்குள்ளேயே இருந்து கரோனா பரவிய முதல் நபர். இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை. முக கவசங்கள், வென்டிலேட்டர்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. 1கோடி மாஸ்க், 500 வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.    

   
 

சார்ந்த செய்திகள்