அண்மையில் டிடி தொலைக்காட்சியின் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்ற போது தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் திட்டங்கள் வளர்ச்சித் துறையின் உடைய ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பொழுது மைக் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் ஒரு சில வரிகள் சரியாகக் கேட்கவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் சொன்னோம்'' என விளக்கம் அளித்துள்ளார்.
Published on 25/10/2024 | Edited on 25/10/2024