![congress k sazhagiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/X62_GXYyyfb6SLxQBNraYQ0w_j8DBvRR5uu8Twbz5Os/1604157134/sites/default/files/inline-images/zdsgfsdgdsgdsgds_0.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் வருகின்ற 6 -ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடக்க இருப்பதாக, தமிழக பா.ஜ.க அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் பாஜகவினர்.
இந்நிலையில், மனுதர்மம் நூல் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.கவினர் திருமாவளவனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருந்தனர். அதேபோல் தமிழகத்தில் பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது எனத் திருமாவளவனும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் 'ஏர்கலப்பை யாத்திரை' நடத்த இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், காங்கிரஸ் சார்பில் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக, 'ஏர் கலப்பை யாத்திரை' விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.