Published on 16/03/2021 | Edited on 16/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளும் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளன.
இந்நிலையில், 35 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சயுபுல்லா என்பவர் 2013ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் அமைந்தகரை காவல்துறையினர் தற்போது ரஞ்சன் குமாரை கைது செய்துள்ளனர்.